Home > Programmes > Tamil Language

Tamil Language

 
நோக்கம்  

 

ரிவர்சைட் தொடக்கப்பள்ளியிலிருக்கும் மாணவர்களிடையே தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் போன்றவற்றில் ஆர்வம் தூண்டுவதே நம் நோக்கமாகும். தமிழ் கற்றலின் வாயிலாகவும், தரமான கற்பித்தல் முறையின் வாயிலாகவும் மாணவர்களின் மொழியாற்றலை மேம்படுத்த நாம் முற்படுகிறோம்.

 

தமிழில் பேசவும் படிக்கவும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட நம் தமிழ் மொழித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.  போட்டிகள், வாசிப்பு நடவடிக்கைகள்,  தமிழ் மொழி வாரம், மற்றும் கற்றல் பயணங்கள் போன்றவற்றை நாம் நடத்தி வருகிறோம்.

 

 

ஆசிரியர்கள்

 

திருமதி காயத்திரி அனுசூயா

திருமதி நௌஃபிலா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கற்றல் நடவடிக்கைகள்

 

 

 

வாய்விட்டு வாசித்தல் நடவடிக்கைகள்

 

தமிழில் வாசிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள, வாய்விட்டு வாசித்தல் நடவடிக்கைகள் மாணவர்களுக்கு வாரந்தோறும் இருமுறை நடத்தப்படுகின்றன.  இந்த நடவடிக்கைகளின்போது மாணவர்கள் தமிழ் கதைநூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள். தொடக்கநிலை 3ஆம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு 'சுட்டி மயில்' என்னும் தமிழ் மாத இதழும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

தாய் மொழி வாரம்


 

 தமிழ் மொழி வாரம் இரண்டாம் தவணையில் நடைபெறும். மாணவர்கள் சில பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார அலங்காரங்கள், தமிழ்மொழிப் போட்டிகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். மேலும், மாணவர்கள் கற்றல் பயணங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். இதன் மூலம் நாம் மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, பெற்றோர்களிடையே நல்லுறவை எற்படுத்தவும் முற்படுகிறோம்.